Dulqer Salmans Next Film

லையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், அவ்வப்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்

அவரது நடிப்பில் கர்வான் என்ற இந்தி படமும், நடிகையர் திலகம் படமும் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றனர். அவர் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பிரதானமாக நடித்து வந்தாலும் துல்கரின் 25-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லி, கோவாவில் நடத்தப்பட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த போஸ்டரை தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் மேமன் வெளியிடுகிறார். இது குறித்து கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த சர்ப்ரைஸை வெளியிட இது தான் சரியான நேரம். திரைத்துறையில் துல்கர் சல்மான் 6 வருடங்களை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில், அவரின் 25-வது படமான `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகிறது. இன்னும் பல ஆச்சர்யங்களும் காத்திருக்கின்றன" என குறிப்பிட்டிருக்கிறார்.